தொற்று நோய் அபாயம்

Update: 2026-08-30 13:24 GMT

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நவீன மின் தகன மேடை பழுதாகி, ஒரு மாதத்திற்கு மேலாக செயல்படாமல் இருந்தது. தற்போது அது சரி செய்யப்பட்டு மீண்டும் உடல்கள் எரிக்கப்படுகிறது. ஆனால் முழுமையாக உடல்கள் எரிக்கப்படாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இது போன்று 4 உடல்களுக்கு மேல் பாதி எரிக்கப்படாமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இறந்த உடல்களை முழுமையாக எரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்