பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு அரசு தொடக்கப்பள்ளி அருகே சமுதாய கூடம் உள்ளது. இது பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு எந்தவொரு நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத நிலை தொடர்கிறது. எனவே அந்த சமுதாய கூடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.