அருப்புக்கோட்டை நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் விளையாடும் குழந்தைகள் துரத்திச் சென்று கடிக்கிறது, வாகனங்களின் குறுக்கே பாய்வதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?