இருக்கைகள் இல்லாததால் முதியவர்கள் அவதி

Update: 2026-08-30 13:42 GMT

கூடலூர் பஜாரில் தபால் நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் பணம் செலுத்த ஒரு கவுண்ட்டர் மட்டுமே உள்ளது. இதனால் பணம் செலுத்தவோ, பணம் எடுக்கவோ நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் ஓய்வூதியம் தொடர்பாக வரும் முதியவர்கள் அமர இருக்கைகள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்