காய்ந்து வரும் மரக்கன்றுகள்

Update: 2026-08-30 14:03 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் சாலை ஓரங்களில் முறையான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பின்றி நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீர் பாய்ச்சப்படாததால் காய்ந்து கருகி வருகின்றன. மேலும் பல இடங்களில் சாலையை ஒட்டியவாறு நடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மாறும் அபாயமும் நிலவுகிறது. எனவே எஞ்சியுள்ள மரக்கன்றுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் சரியான இடங்களில் முறையான திட்டமிடலுடன் மரக்கன்றுகளை நடவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்