கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத்தூர் கீழ் வீதியில் குழந்தைகளும், சிறுவர்களும் தனியாக வெளியே நடமாட முடியாமல் கூட்டமாக உள்ள தெரு நாய்களைக் கண்டு அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் குழந்தைகளை கண்டாலே தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?