குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2026-08-30 13:03 GMT

பொன்மனை கிராமத்தில் புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் முறையாக பராமரிக்காததால் செடி,கொடிகள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ஆறுமுகம், பொன்மனை.

மேலும் செய்திகள்