வடுகன்பற்று கிராமத்தில் கவர்குளம் உள்ளது. இந்த குளத்தில் நான்கு குடிநீர் கிணறுகள் உள்ளன. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குடிநீர் கிணறுகள் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த குளத்தில் வடக்கு புறத்தில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் குளத்தின் தண்ணீர் மாசடைவதுடன், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.