மருங்கூரில் இருந்து ராஜாவூர் செல்லும் சாலையில் மருங்கூர் பேரூராட்சி அலுவலகமும், அதன் அருகில் பஸ் செல்லும் சாலையில் குறுகிய வளைவும் உள்ளது. இந்த வளைவில் பஸ்கள் செல்லும்போது எதிர் திசையில் வரும் இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி இந்த வளைவில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், மருங்கூர்.