புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் சாலையில் கா.சத்திரம் சந்திப்பில் உள்ள வழிகாட்டி பலகையில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் புதிதாக ஊருக்கு வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஊர் பெயர் மற்றும் வழி தெரியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வழிகாட்டி பலகையில் உள்ள விளம்பர சுவரொட்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.