அதிக உயரத்தில் பயணிகள் நிழற்குடை

Update: 2026-08-23 09:45 GMT

உடுமலையை அடுத்த போடிபட்டி முருகன் கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை அதிக அளவு உயரத்தில் கட்டப்பட்டதால் அதை பயன்படுத்தி முடியாமல் பயணிகள் பரிதவி்க்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் அதில் ஏறிச்சென்று அமர முடியவில்லை. இதனால் சாலையின் ஓரத்தில் கால் கடுக்க காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. கட்டுமான பணியின் போது காட்டிய அலட்சியம் காரணமாக மக்கள் வரிப்பணம் முழுவதும் வீணாகி பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே போடிபட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையின் உயரத்தை குறைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கண்ணன், உடுமலை.

மேலும் செய்திகள்