கோத்தகிரியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் அலுவலக வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு வந்து செல்பவர்கள் அச்சப்படும் நிலை காணப்படுகிறது. எனவே அங்கு வளர்ந்துள்ள புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.