கொட்டாரம் ஆறுமுகபுரம் பகுதியில் அகஸ்தியர் புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தின் மடையை திறப்பதற்கு சாலையோரத்தில்ஒரு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையும் கிணத்தின் மேல் அமைப்பும் ஒரே மட்டத்தில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சிறுவர்கள் இந்த கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் போயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிணற்றில் மேல் மூன்றடி உயரத்திற்கு பாதுகாப்புச் சுவர் அமைத்து கம்பிவேலி அமைத்து மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.