ஆற்றூர் சந்திப்பு பகுதியில் எப்போது வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்கு அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளதால் தினமும் சுற்றுவட்டார கிராமங்களைசேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு இந்த சந்திப்பு பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்த சந்திப்பில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் எதிர் பகுதியில் பஸ் நிறுத்தமும், பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிழற்குடையில் மின்விளக்கு வசதி அமைக்கப்படாமல் இருப்பததால் இரவு நேரத்தில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள், பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கும்போது ஒருவித அச்சத்துடனேயே நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பெண்கள் நலன்கருதி நிழற்குடையில் மின்விளக்கு அல்லது சோலார் விளக்கு அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஆற்றூர்.