கால்நடைகள் தொல்லை

Update: 2026-08-23 10:09 GMT

கோத்தகிரியில் நகராட்சி மார்க்கெட் உள்ளது. இங்கு தினந்தோறும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் மார்க்கெட் பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அவை மார்க்கெட்டில் மீதமாகும் காய்கறி, பழ கழிவுகளை தின்று வருகின்றன. அத்துடன் ஆங்காங்கே அசுத்தப்படுத்தி விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்