விஷ ஜந்துக்களின் புகலிடம்

Update: 2026-08-02 17:27 GMT
கள்ளக்குறிச்சி 9-வது வார்டு பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த கட்டிடம் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவருகிறது. குடியிருப்பு பகுதியின் நடுவே இந்த கட்டிடம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்