திருப்பூர் மாநகர பகுதிகளில் தெருக்களின் பெயர்களை கண்டறிய வழிகாட்டி, பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுவரொட்டி ஒட்டும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தெருதெரியாமல் அலையாய் அலைகிறார்கள். எனவே ஊர் பெயர் உள்ள பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.