ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கடந்த சில நாடகளாக கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சை பெரும் முதியோர்கள் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.