ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் நீண்ட காலமாக காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகவும் அவதியடைகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.