சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் உள்ள கிளை நூலகம் சுமார் 15 ஆண்டுகளாக தனிக்கட்டிடம் இல்லாமல் கிராம சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் நூலகத்திற்கு வருபவர்களும், கிராம சேவை மையத்திற்கு வருபவர்களும் கடும் அவதியடைகின்றனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி நூலகத்திற்கென தனி கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.