ஈரோடு பாரதி தியேட்டர் சாலையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன. இதனால் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.