கரூர் மாவட்டம் கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மிகவும் மோசமானதாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பராமரிப்பின்றிக் கிடப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி கழிவறையை சீரமைத்து, தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதோடு, சுற்றியுள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.