மொடக்குறிச்சி குளூர் செங்கரைப்பாளையம் மயானம் அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி மொடக்குறிச்சி செல்லும் சாலையில் தேங்கி வந்தது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.