மதுரை நகர் அண்ணா நகர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் சில வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அச்சாலையில் சாலையை கடக்க காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் எதிரே பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். வாகனங்களை அதிவேகத்தில் இயக்கும் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?