தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-07-19 10:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வருவார்களா?

மேலும் செய்திகள்