நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2026-07-19 07:35 GMT

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் நுழைவுவாயில் பகுதியில் பார்வதிபுரம் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலத்தில் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். முதியவர்கள் வெயில் காலங்களில் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி பார்வதிபுரம் பஸ்கள் நின்று செல்லும் அண்ணா பஸ்நிலையத்தின் வெளிபுறமான நுழைவுவாயில் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி, கோட்டார்.

மேலும் செய்திகள்