மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிப்பதுடன், வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?