மேலப்பாவூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையில் சிற்றாறில் இருந்து செல்லும் கால்வாயில் நடைபாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் ஒருபுறம் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. விளைநிலங்களுக்கும் விவசாயிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அங்கு புதிய நடைபாலம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.