ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்

Update: 2026-07-05 13:33 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல் வளர்ந்துள்ளன. நிலத்தடி நீரைச் சுரண்டும் இந்த நச்சு மரங்களால் ஏரி வறண்டு போவதுடன், நீரைச் சேமிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, ஏரியை முற்றிலுமாகத் தூர்வாரச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்