தாமதமாகும் சத்துணவு கூட கட்டிட பணி

Update: 2026-07-05 12:54 GMT

பர்கூர் அடுத்த குண்டலகுட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்த பழமையான சத்துணவு கூடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த சத்துணவு கூடம் கட்ட தொடங்கி ஓராண்டு ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் சத்துணவு சமைக்க காலதாமதமாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு காலதாமதம் இன்றி விரைந்து சத்துணவு கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்