கோத்தகிரி கடைவீதி அருகே இந்துக்களின் பொதுமயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பொதுமயானத்தில் உள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.