பயனற்ற காட்சி முனையம்

Update: 2026-07-05 13:29 GMT

கொல்லிமலை அடுத்த வரலாற்று புகழ் வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் பிரிவு சாலையில் இருந்து விளாரம் கிராமம் செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு காட்சி முனையம் வனத்துறையினரால் அமைக்கப்பட்டது. தற்போது அது சேதமடைந்ததால் அங்கு செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். பராமரிப்பு இல்லாததால் அந்த காட்சி முனையம் பகுதி சேதமடைந்தும், குப்பைகளும் தேங்கி வருகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்