ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே நாய்கள் தொல்லைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமா?