கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள வழிகாட்டி பலகையானது சேதமடைந்து எழுத்துகள் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வழிதெரியாமல் வெகுதூரம் சுற்றித்திரிந்து அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பலகைகளில் அழித்து காணப்படும் ஊர்பெயர்களை மீண்டும் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளாார்.