சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பழைய வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தின் பின்புறம் நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. இதனால் அப்பகுதியில் புதர்கள், செடிகள், கொடிகள் வளர்ந்து பாம்பு, தேள் மற்றும் பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றிய அலுவலர்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மங்களூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பராமரிப்பு பணிகள் செய்யவும், செடி கொடிகளை விரைந்து அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.