கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் நடைபாதைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக படுத்து கிடக்கின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. கடந்த வாரம் 2 பேரை தெருநாய்கள் கடித்து உள்ளன. இதனால் நடைபாதைகளில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.