பயன்படாத சுகாதார வளாகம்

Update: 2026-07-05 14:03 GMT

அம்மாப்பேட்டை மண்டலம் 32-வது வார்டுக்கு உட்பட்ட ஆனந்தா பாலம் அருகில் ஆற்றோரம் தெருவில் மாநகராட்சி சார்பில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதி பெண்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. தண்ணீர், மின் விளக்கு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த இடம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்