தெற்கு சூரங்குடி, அத்திகடை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தும் பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பஸ் நிறுத்தம் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலை வாகனங்கள் செல்லும்போது மழைநீர் அங்கு காத்திருக்கும் பயணிகள் மீது தெறிப்பதால் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் மழைநீர் ஓடைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கேஸ்வரன்,அத்திகடை.