மாணவர் விடுதி அமைக்க வேண்டும்

Update: 2026-07-05 11:29 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் மற்றும் எம்.புத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி, நத்தத்தில் 100 பேர் தங்கும் வகையில் புதிய அரசு மாணவர்கள் விடுதி அமைக்கப்பட வேண்டும். மேலும், இப்பகுதி மக்களின் அவசரச் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்படும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். ஏழை-எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்