புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கீரனூர் அருகேயுள்ள இலுப்பக்குடிபட்டி அரிஜன காலனி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குரங்குகளின் தொல்லை மிகக் கடுமையாக உள்ளது. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வதுடன், மலம் கழித்து அசுத்தம் செய்வதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். வெளியூர் சென்று திரும்பினால் வீடே பாழாகும் அளவிற்கு குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.