திருச்சி 13-வது வார்டு பட்டர்வொர்த் ரோடு - நான்கு சாலை சந்திப்பில் உள்ள புராதன பூங்காவின் ராட்டினம் காம்பவுண்டிற்கு வெளியே சாலையை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கிறது. தனியார் பள்ளியிலிருந்து பட்டர்வொர்த் ரோடு திருப்பத்தில் திரும்பும் வாகன ஓட்டிகளுக்கு திடீரென தலைக்கு மேல் சுழலும் இந்த ராட்டினம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், விபத்து அபாயத்தையும் உருவாக்குகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருதி காம்பவுண்டிற்கு வெளியே ராட்டினம் நீட்டாதவாறு மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.