தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-05 11:29 GMT

அரியலூர் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை பஸ்சுகாகக் காத்திருக்கும் பயணிகளையும், வெளியூரிலிருந்து வருபவர்களையும் அச்சுறுத்தும் விதமாகக் கடிக்கப் பாய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லவே பெரிதும் அஞ்சுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்