குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-07-05 11:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கடைவீதி, திருவள்ளுவர் நகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி பெரும் அட்டகாசம் செய்து வருகின்றன. விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இங்கு சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்