கொழுமத்தில் உள்ள தாண்டவேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில், கோவிலின் முன்பாக பழமையான மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் தண்டு பகுதி பெரும்பாலாக கரையான்களால் அரிக்கப்பட்டு, உட்புறம் பொந்து போல மாறி பலமிழந்து காணப்படுகிறது. இந்த மரத்தின் மிக அருகிலேயே மின்சார கம்பிகள் செல்கின்றன. தற்போது பலத்த காற்று வீசி வருவதால், மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து, மின்சார கம்பிகள் சேதமடை வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் இந்த மரத்தை முறையாக வெட்டி அகற்ற வேண்டும்.
பாஸ்கர், கொழுமம்.