ராமநாதபுரம் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென துரத்தி கடிக்கின்றன. மேலும் இந்த தெருநாய்கள் சாலையில் சண்டையிட்டு கொண்டு வாகனஓட்டிகள் செல்வதற்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இப்பகுதியில் தொடர் தொல்லையை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வருமா?