தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-05 10:04 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்