சேதமடைந்த தடுப்புச்சுவர்

Update: 2026-06-28 17:22 GMT

சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாராத நிலையம் முன்பு சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயையொட்டி கூட்ஸ்செட்டின் தடுப்புச்சுவர் உள்ளது. இந்த தடுப்புச்சுவர் பல மாதங்களாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த தடுப்புச்சுவர் மேலும் சரிசெய்யாமல் இருந்தால் முற்றிலும் உடைந்து சாக்கடை கால்வாயில் விழுந்து விடும். எனவே ரெயில்வே துறை அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்