தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரை அடுத்த சீனிவாசன்நகர் 5-வது தெருவில் மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.