விபத்து அபாயம்

Update: 2026-06-28 14:59 GMT

மதுரை வார்டு எண் 88-ல் அனுப்பானடி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. சில நாட்களுக்கு முன்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை தொடங்கப்படவில்லை, இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் நிறுத்தப்பட்ட பணியை தொடங்கி விரைந்து முடித்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்