அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை அச்சுறுத்துவதுடன், அவர்களை கடிக்கவும் பாய்கின்றன. இதன் காரணமாக பக்தர்களும், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.